செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்…

சந்தையில் செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை எதிர்காலத்தில் 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

 

 

 

சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் சந்தையில் செத்தல் மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

 

 

 

தற்போது சுமார் 120 செத்தல் மிளகாய் கொள்கலன்கள் சுங்கக் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களால் தேவையான ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு, சுங்கக் கட்டணங்கள் உள்ளிட்ட உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டு, பரிசோதனை நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தரம் தொடர்பான பிரச்சினை காரணமாகவே இந்தக் கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் உள்ளதாக அவர் கூறினார்.

 

 

 

முன்னர் சுமார் 1,050 ரூபாவாகக் காணப்பட்ட செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் விலை, தற்போது சுமார் 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பி. சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

அத்துடன், இந்த விலை மேலும் அதிகரித்து 2,500 ரூபா எல்லையைத் தாண்டக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

 

 

இந்த நிலைமையானது, மிளகாய்த்தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாகப் பல தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வர்த்தகர்களுக்குப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

 

எனவே, சுங்கப் பொறுப்பிலுள்ள செத்தல் மிளகாய் தொகைகளை விடுவிப்பதற்குத் தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்பத் துரித பொறிமுறையொன்றைத் தயாரித்துத் தருமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் மூடப்படுகிறது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு - கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் இன்று (23) இரவு 11 மணி முதல்...

தாம் நிரபராதிகள்: யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த...