பாதீட்டுக்கு எதிராக இன்று ‘தேசிய எதிர்ப்பு நாள்’ – பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைவு

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்றைய தினத்தைத் ‘தேசிய எதிர்ப்பு நாளாக’ பிரகடனப்படுத்தியுள்ளன.

 

 

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர் மற்றும் அதிபர் சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட வைத்தியர்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

 

 

அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25 ஆயிரம் ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனுராத சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கறுப்பு ஆடை அணிந்து பாடசாலைகளுக்குச் சமுகமளிக்கவுள்ளதாக தரம்பெற்ற அதிபர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொட்டுவ குறிப்பிட்டுள்ளார்.

 

 

தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தைப் புறக்கணித்துச் செயற்படுவதே இத்தகைய பிரச்சினைகளுக்குக் காரணம் என அகில இலங்கை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் உதயனி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கோ அல்லது சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கோ எவ்வித தீர்வுகளையும் வழங்க அரசாங்கம் தவறிவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் லசித கன்னங்கர குற்றம் சுமத்தியுள்ளார்.

 

 

அரச தாதியர் சங்கம் முன்வைத்துள்ள பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய எச்சரித்துள்ளார்.

 

 

இதேவேளை, அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் மூடப்படுகிறது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு - கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் இன்று (23) இரவு 11 மணி முதல்...

தாம் நிரபராதிகள்: யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த...