மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆறுகளின் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மிகுந்த விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
விசேடமாக வான்பாயும் நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதிகளில் வாழும் மக்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் வான்கதவுகள் திறக்கப்படுவது தொடர்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமையச் செயற்படுவது மிகவும் முக்கியமானது என நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) வலியுறுத்தியுள்ளார்


