முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்!
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்.
காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்திர மாலினி ராஜபக்ச, முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்சவின் தாயாரும் ஆவார்.
சமல் ராஜபக்ச, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராகவும் பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்த மூத்த அரசியல்வாதியாவார்.
இந்த நிலையில், காலமான சந்திர மாலினி ராஜபக்சவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


