நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5)ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்த ஏனைய 23 பேரும் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஈரானின் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழு

படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக, அந்நாட்டின் அழைப்பை ஏற்று இலங்கையிலிருந்து வருகை...

உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.  இதற்கமைய, இலங்கை...