2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறை தொடர்பாகப் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
🔹 பாடசாலைச் சீருடை: சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலைச் சீருடைகள் அடுத்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும். இதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
🔹 அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: 2027ஆம் ஆண்டு முதல் மாதாந்தக் கொடுப்பனவு ரூ.7,500 இலிருந்து ரூ.12,500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
🔹 டிஜிட்டல் கல்வி: 750 பாடசாலைகளுக்கு இணைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
🔹 கணனிகள் வழங்கல்: பாடசாலைகளுக்கு கணனிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
📚 கல்வித்துறையின் மேம்பாட்டை நோக்கிய இந்த அறிவிப்புகள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
#SriLankaBudget2027 #Education #SchoolTeachers #SchoolUniform #DigitalEducation #AnuraKumaraDissanayake #SriLankaNews


