ஹோர்மூஸ் நீரிணை- கப்பல்களுக்கு புதிய சேவைக்கட்டணம் விதிக்க ஈரான் திட்டம்!

உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையான ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம், பாதுகாப்பு மற்றும் வழிநடத்தல் சேவைகளுக்காகக் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற போரின் போது ஈரானுக்கு ஆதரவாகவும் நட்பாகவும் செயல்பட்ட நாடுகளுக்கு இந்தக் கட்டணத்தில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் எனச் சீனாவிற்கான ஈரான் தூதர் அப்துல்ரேசா ரஹ்மானி பஸ்லி தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஓமனுடன் இணைந்து புதிய நடைமுறைகளை ஈரான் ஆலோசித்து வருகின்றது.

அமெரிக்கா ஈரான் இடையேயான தற்காலிக ஒப்பந்தப்படி 60 நாட்களுக்குக் கட்டணம் எதுவுமில்லாமல் கப்பல்கள் இயக்கப்பட்டுள்ளன. அந்த அவகாசம் முடிந்த நிலையில், ஈரான் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நியூயோர்க் நகரில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கோனி தீவு (Coney Island) பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்....

இறுதி நிகழ்வுகள் முடியும் வரை ஈரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது...

ஆயதுல்லா அல் கமேனியின் இறுதி நிகழ்வுகள் முடியும் வரை ஈரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது. டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை