முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்குa

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

 

 

2023ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற பயணம் தொடர்பாக 16.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அரசாங்கப் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணைக்கோவைகள் மற்றும் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

 

 

 

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவுவதற்காக வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

 

 

 

இதற்கமைய, சட்டமா அதிபரின் நிலைப்பாடு மற்றும் வழக்கு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு...