“முரசு” சூறாவளி தீவிரமடையும் சாத்தியம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த “முரசு” (Murasu) சூறாவளியானது, நேற்றிரவு (1) 11.30 அளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் (வடக்கு நெட்டாங்கு 13.3°N மற்றும் கிழக்கு அகலாங்கு 83.0°E) மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெறுகிறது

 

 

 

இந்த சூறாவளியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளிப் புயலாக (Severe Cyclonic Storm) மேலும் வலுப்பெறக்கூடும்.

 

 

 

அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவுக்கும் நாளை (3) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியான நெல்லூருக்கும் நர்சாபூருக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

 

 

 

கடற்படை மற்றும் மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை

 

 

 

10N-17N மற்றும் 80E-90E ஆகிய எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரும் வரை மீனவர்களும் கடற்படையினரும் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 

 

 

ஏற்கனவே அப்பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

அதேநேரம். மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமற்ற மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கும் மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

 

 

அத்துடன், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகளைக் கவனத்தில் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

 

 

 

மழை மற்றும் காற்றின் நிலை

 

 

 

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென்மேற்கு அல்லது தெற்கு திசையிலிருந்து மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

 

 

 

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

 

 

 

கடலின் தன்மை

 

 

 

சிலாபத்திலிருந்து பொத்துவில் வரையான கடல் பகுதிகள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடல் பகுதிகள் மிதமான அலையுடன் காணப்படும்.

 

 

இருப்பினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகவும் மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தப்பியோட முயன்று துப்பாக்கிச் சூட்டில் பலியான விளக்கமறியல் கைதி – மேலும்...

கண்டி, பல்லேகலை தும்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் விளக்கமறியல் கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.     நேற்று...

ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம் – காரணம் வௌியானது

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றில் திடீரென புகைப்படர்ந்தமையினால் நேற்றிரவு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.     ஸ்ரீலங்கன் விமானப் போக்குவரத்து...