அஸ்வெசும தகுதி பெறாதவர்களுக்கு மேன்முறையீடு செய்ய அவகாசம்

அஸ்வசும’ நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள் தகுதியடையவில்லை என நலன்புரி நன்மைகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

 

 

இவ்வாறு தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவுக்கு அமையவே இவ்வாறு மேன்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இதற்காக 2026 ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 11 ஆம் திகதி வரையிலான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

அத்துடன், தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள நலன்புரிப் பிரிவு குறித்து திருப்தியடையாத தகுதியான பயனாளிகளுக்கும் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ரகித, சரித்திற்கு பிணை வழங்கியதை எதிர்த்து மனுத் தாக்கல்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவரின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில்...

சில மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.       இன்று...