யோஷிதவின் வழக்கு தொடர்பான மேலதிக சாட்சி விசாரணை ஆரம்பம்

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

 

 

 

இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

 

 

 

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையாகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலில் சாட்சி விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

 

 

 

730 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள 5 காணிகளை கொள்முதல் செய்ததன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி, சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அஸ்வெசும தகுதி பெறாதவர்களுக்கு மேன்முறையீடு செய்ய அவகாசம்

அஸ்வசும' நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.       அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள்...

ரகித, சரித்திற்கு பிணை வழங்கியதை எதிர்த்து மனுத் தாக்கல்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவரின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில்...