லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 

 

 

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள 86 ஆம் இலக்கக் கட்டளையை மீறி, நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை வழங்காமை தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

 

 

இவ்வழக்கு புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

இதற்கமைய, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்குச் அழைப்பாணை பிறப்பித்த நீதிமன்றம், இந்த வழக்கை நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்...

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள்...