களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு அபாயம்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களு கங்கையை அண்மித்த தாழ்நில பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்த நிலைமை ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

 

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத மற்றும் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொடை, மில்லனிய, புளத்சிங்ஹள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் இந்தச் சிறு வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

எனவே, இது தொடர்பில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகளினூடாக போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

Breaking: நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

வான்பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் இன்று (26) காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.   நீர்த்தேக்கம் வான்பாய்வதனால் வெளியேற்றப்படும்...