லூலாவின் 4 ஆவது வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!

பிரேசிலின் நான்காவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

 

தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

 

 

ஊழல், சமூகப் பிரிவினைகள் மற்றும் அரசியல் பொய்களுக்கு எதிராகப் பிரேசில் மக்கள் வெற்றி பெற்றுள்ளதாகத் தனது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

 

லூலாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியானது, தோல்வியடைந்த அரசியல் பரம்பரைகளும், சட்டத்தை விட அதிகாரமே உயர்ந்தது என்று கருதும் கடந்த கால சக்திகளும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை எடுத்துக் காட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், பிரேசில் நாட்டை மீண்டும் ஒருமுறை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தலைமை தாங்குவதற்காக லூலா டா சில்வாவுக்கு தனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

டெங்கு அதிஅபாய வலயத்தில் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்

நாடு முழுவதும் தொடர்ந்தும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியம்

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவது தொடர்பில் முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.     தற்போது குறித்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 696.96 m/MSL (கடல்...