புத்தளத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு – ‘அர்னாப்’ சூறாவளியால் இலங்கைக்கு மறைமுகத் தாக்கம்!

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

இதில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

 

 

இதற்கு அடுத்தபடியாக குளியாப்பிட்டிய பகுதியில் 193.0 மில்லிமீற்றர், இலுப்பைக்கடவை பகுதியில் 187.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

இதேவேளை, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ‘அர்னாப்’ (ARNAB) சூறாவளி தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கு மறைமுகமான தாக்கம் ஏற்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 

 

இதன் காரணமாக நாட்டின் வடக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

லூலாவின் 4 ஆவது வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!

பிரேசிலின் நான்காவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத்...

நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையுடனான மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால்...