வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவளி: 7 மாகாணங்களுக்கு 100 மி.மீ மழை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் செல்வாக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு திசை நோக்கி நகர்ந்து, வட அகலாங்கு 15.3° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 89.7° பகுதியில் மையம் கொண்டுள்ளது.

 

இந்த தொகுதி மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து, இன்றைய தினத்துக்குள் (26) சூறாவளியாக உருவெடுக்கக் கூடும். தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27) தீவிர சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த அமைப்பு இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என்றபோதிலும், இதன் காற்று சுழற்சி தீவு முழுவதும் பரவுவதால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கக்கூடும்.

 

 

வடக்கு, மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

லூலாவின் 4 ஆவது வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!

பிரேசிலின் நான்காவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத்...

புத்தளத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு – ‘அர்னாப்’ சூறாவளியால் இலங்கைக்கு மறைமுகத்...

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.     இதில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில்...