7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ திட்டம்!

எரிவாயு விநியோகத்தை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சந்தையில் நிலவும் அதிக தேவை மற்றும் நுகர்வோரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, கடந்த 22 ஆம் திகதி வருகை தந்த கப்பலுக்கு மேலதிகமாக நேற்றைய தினமும் (24) ‘GOODWILL’ கப்பல் மூலம் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாளை (26) மேலும் ஒரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாகத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், அதற்கமைய 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட கப்பலிலிருந்து 350,000 எரிவாயு சிலிண்டர்கள் கடந்த 23, 24 மற்றும் இன்றைய தினமும் (25) தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

எனவே, எதிர்வரும் சில நாட்களில் நுகர்வோர் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சந்தையில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

லூலாவின் 4 ஆவது வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!

பிரேசிலின் நான்காவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத்...

புத்தளத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு – ‘அர்னாப்’ சூறாவளியால் இலங்கைக்கு மறைமுகத்...

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.     இதில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில்...