நாடுமுழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி அபாய இடங்கள்

தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி-அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

 

 

 

இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த மாதம் 3 ஆம் திகதி முதல் இதுவரையில் 25 மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

 

 

அதேபோல், முன்னர் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தின் காரணமாக பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

சில இடங்களில் பாறைகளும் மண் அடுக்குகளும் தற்போதைய மழையுடன் அவை அடித்துச் செல்லப்படும் கடும் அபாயம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

 

 

 

ஒரு பகுதிக்குக் குறைந்தளவு மழைவீழ்ச்சி பதிவான போதிலும், கடந்த சில நாட்களில் பெய்த மழைவீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை அறிவித்தல்கள் செல்லுபடியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

எனவே, அபாயகரமான பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

இதனிடையே, நேற்று (21) பெய்த மழைவீழ்ச்சியுடன் மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

கண்டி மாவட்டம்: உடபலாத்த, மெததும்பர, குண்டசாலை

 

 

 

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட்

 

 

 

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, எலபாத, குருவிட்ட

 

 

அத்துடன், பெய்து வரும் மழையுடன் இந்த எச்சரிக்கை அறிவித்தல்கள் மாற்றமடையக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல்...

சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும்

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.       நாட்டிற்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம்...