சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் – தூதரகத்தை விட்டு வெளியேறும் அமெரிக்கா!

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று (21) மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

காயமடைந்தவர்களின் நிலை தீவிரமாக உள்ளது என்றும், விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

 

இந்தத் தாக்குதல் தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீப நாட்களாக சவூதி விமான நிலையங்கள் மீது எறிபொருட்களை தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 

 

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. முன்னதாக தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

 

 

மக்கா, மதினா ஆகிய புனித நகரங்களில் அமைந்துள்ள விமான நிலையங்கள் தவிர பிற விமான நிலையங்கள் தங்கள் இலக்கு வரம்பிற்கு உள்ளே உள்ளதாவும் எனவே யாரும் பயணிக்க வேண்டாம் என்றும் ஹவுதிக்கள் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

 

 

ஏமனில் சவுதி ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த செப்டம்பர் முதல் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது.

 

 

இதில் ஏமன் அரச படைகளுக்கு ஆதவராக செயல்படும் அண்டை நாடான சவுதி மீது ஹவுதிக்கள் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

 

 

சவுதியில் பதற்றம் அதிகரித்த காரணத்தினால் அங்குள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் தனது 75 வது வயதில் காலமானார்.     அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது வான் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு,...

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை...