100 மில்லிமீற்றர் பலத்த மழை!

நாட்டைச் சூழலுள்ள பகுதிகளில் காணப்படும் கீழ் மட்ட வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானமும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) பிற்பகல் 3 மணிக்கு விடுத்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை, காலி மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

போராட்டம் நடத்தி வரும் தேரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி செயலாளர் வருகை 

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வரும் மகா சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

தேரர்களின் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தில் வாகன நெரிசல்

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், தேரர்களின் மத உரிமைகளையும் வலயுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும்...