நாளை 150 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்

நாளை (14) நாட்டின் ஆறு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடும்.

 

 

அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

நாட்டைச் சூழவுள்ள வங்காள விரிகுடா கடற்பரப்பின் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இதேவேளை, மேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

 

 

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

மேலும், எதிர்காலத்தில் வெளியிடப்படும் வளிமண்டலவியல் முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

கொழும்பு, கிராண்ட்பாஸ் - மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக...

இலங்கையின் பொருளாதாரம் குறித்து IMF கணிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அண்மைய 'உலக பொருளாதார தொலைநோக்கு' (World Economic Outlook) அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த...