இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (13) இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, மாலை 6.30 மணிக்கு ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது


