பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இன்று (13) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

கொழும்பு, கிராண்ட்பாஸ் - மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக...

நாளை 150 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்

நாளை (14) நாட்டின் ஆறு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என...