டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாறும் சிறுவர் துஷ்பிரயோகம்!

நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே, அதன் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில ஆண்டுகளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடுகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குறிப்பாக, சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வன்முறைக்குள்ளாகல், தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்லாமை அதிகரித்தல், தாய்மார்கள் வெளிநாடு செல்லுதல், குடும்பத் தகராறுகள் மற்றும் பெற்றோரின் விவாகரத்து, சிறுவர்கள் ஏனைய சிறுவர்களின் கண்ணியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடத் தூண்டுதல் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும் போக்கினால் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், சிறுவர்கள் அதிகளவில் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் சிறுவர் பருவம் இழக்கப்படுவதோடு, கல்வியின் மீதான கவனமும் குறைகிறது. இவ்வாறான விடயங்களால் மனவலிமை மிக்க ஒரு பிள்ளையை உருவாக்குவது இன்று எம்மமுன்னுள்ள சவாலாக மாறியுள்ளது.

 

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் அனைத்து வகையான துஷ்பிரயோகங்களிலிருந்தும் (உடலியல், பாலியல், உளவியல் மற்றும் புறக்கணிப்பு) அவர்களைப் பாதுகாப்பதும், இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சிறுவர்களைப் பாதுகாப்பதும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முதன்மைப் பொறுப்பாகும் என்பதுடன், அதற்காகத் தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரீதி இனோகா ரணசிங்க அறிவித்துள்ளார்.

 

அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களை ஒருபோதும் எவராலும் சமரசத்திற்கு உட்படுத்த முடியாது எனவும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து தாமதிக்காமல் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ‘1929’ என்ற சிறுவர் உதவி தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறும் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சிறுவர்களைப் பாதுகாக்கும் முதன்மைப் பொறுப்பைத் தங்களது குடும்பத்திலிருந்தே தொடங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், அனைத்துச் சிறுவர்களையும் பாதுகாக்க நாம் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின்...

13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!

சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட 13 முக்கிய மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் அரசுக்கு 5.7 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதென...