சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஆணைக்குழு இரத்து செய்துள்ளது.
குறித்த கோரிக்கை பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி பொலிஸ் ஆணைக்குழு இன்று (01) கூடியதுடன், அக்கோரிக்கை தொடர்பான முன்மொழிவு இன்றைய தினத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த இடமாற்றங்கள் தொடர்பான முன்மொழிவை நிராகரிப்பதே பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானமாக இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன, அப்பணியகத்தின் பணிப்பாளர், இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட தரப்பினரின் இடமாற்ற முன்மொழிவு இரத்து செய்யப்பட்டுள்ளது


