மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களைக் குறைப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கை மூலமாக முரண்பாடுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும் இலங்கை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

 

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடரின் (UNGA81) உயர்மட்ட சந்திப்பில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஈரானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி செய்யத் அப்பாஸ் அராக்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

 

இச்சந்திப்பின் போது, தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

 

பிராந்தியத்தில் கூடிய விரைவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு ஊக்குவித்த அமைச்சர் விஜித ஹேரத், முரண்பாடுகளை தீர்ப்பதற்கும் பிராந்திய பதற்றங்களைக் குறைப்பதற்குமான இராஜதந்திர முயற்சிகளுக்கு இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 

அதேநேரம் நேபாள வௌிவிவகார அமைச்சருடனும் விஜித ஹேரத் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்றைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப்...

ஞானசாரவுக்கு எதிரான தண்டனையை அமுல்படுத்துமாறு சட்ட மாஅதிபர் மனு!

முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு உத்தரவிடக்கோரி சட்டமா அதிபரால்...