தங்காலையில் 3 கிலோ ஹெரோயினுடன் 18 வயது இளைஞர் கைது

தங்காலை, பலபொத கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பேலியகொட வடக்கு குற்றப்பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, முதற்கட்டமாக அந்த இளைஞரிடமிருந்து 2,300 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

 

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த போதைப்பொருளைத் தனது 29 வயதுடைய சகோதரரே வழங்கியதாகவும், அவரிடம் மேலும் போதைப்பொருள் உள்ளதாகவும் தெரியவந்தது.

 

இதனைத் தொடர்ந்து, பலபொத – யாயவத்த பகுதியில் உள்ள அந்தச் சகோதரரின் வீட்டைப் பொலிஸார் சோதனையிட்டனர்.

 

பொலிஸார் வருவதையறிந்து சந்தேகநபரான சகோதரன் தப்பி ஓடிவிட்ட நிலையில், வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 842 கிராம் எடையுள்ள ஹெரோயின் பொதயை பொலிஸார் கைப்பற்றினர்.

 

கடலில் மிதந்து வந்தபோது இந்த போதைப்பொருள் பொதி தனது சகோதரருக்குக் கிடைத்ததாகக் கைது செய்யப்பட்ட இளைஞர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

தப்பிச் சென்ற 29 வயது சந்தேகநபரைக் கைது செய்யப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சீரற்ற வானிலை 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 104 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC)...

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.   ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார், முல்லைத்தீவு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய...