வெடிப்பு நிகழ்ந்த தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

வெடிப்புச் சம்பவத்தினால் சேதமடைந்த பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் தற்போதைய நிலைமையைக் கண்டறிவதற்காகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (26) பிற்பகல் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த விபத்தில் உயிரிழந்த வைத்தியசாலை ஊழியர் குறித்துத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவரது இறுதிச் சடங்குகளை நடத்துவதற்குத் தேவையான அனைத்து தலையீடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.

 

மேலும், அந்த குடும்பத்தின் எதிர்கால நலனுக்காகத் தேவையான இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

 

படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மற்றைய ஊழியருக்குத் தேவையான அதிகபட்ச சுகாதார வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கிரிஷ் கொடுக்கல் வாங்கல்: நாமலிடம் சிறையிலேயே வாக்குமூலம் பதிவு!

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான...

லண்டன் விபத்தில் இலங்கை மாணவி பரிதாப பலி

லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இவ்வாறு உயிரிழந்தவர் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்படுகிறது.   தனியார்...