மின்னணு வருமான வரி உரிம சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

மின்சார வாகன வருமான வரி அனுமதிப் பத்திர முறையை (e-Revenue Licence) புதுப்பிக்கும் பணி காரணமாக, 8 மாகாணங்களில் மின்னணு வருமான அனுமதிப் பத்திர சேவை இன்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இச்சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கும்.

 

இதன்படி மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 8 மாகாணங்களில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.

 

பயனாளர்களுக்கு மேலும் வினைத்திறனான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் நோக்கிலேயே இத்தொழில்நுட்ப புதுப்பித்தல் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இருப்பினும், எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் இச்சேவைகளை மீண்டும் வழமை போல் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

BreakingNews | 22 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது!

22 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது! அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 158 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

நவம்பர் முதல் TIN இலக்கம் கட்டாயம் – வௌியானது புதிய அறிவிப்பு

2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது...