மத்திய மலைநாட்டின் பல  பகுதிகளில் கடும் மழை! 

-காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மலைப்பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறையை வழங்க தீர்மானித்துள்ளதாக...

செப்டம்பர் மாத வருவாய் இலக்கை கடந்த இலங்கை சுங்கம்

செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் இலக்கை, மாதம் நிறைவடைவதற்கு முன்னரே அடைந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் விஞ்சிய வருமானத்தை இலங்கை சுங்கம் பெற்றுள்ளது.   இதற்கமைய, செப்டம்பர் மாதத்திற்காகச்...