மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீடிப்பு

மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்து அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

 

சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து அமலில் இருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

இதற்கமைய, இன்று (22) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

 

எச்சரிக்கை மட்டம் 3 – வெளியேறவும் (சிவப்பு எச்சரிக்கை)

கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட், கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு

எச்சரிக்கை மட்டம் 2 – அவதானத்துடன் இருக்கவும்

கொழும்பு மாவட்டம்: பாதுக்க

காலி மாவட்டம்: தவலம, நாகொட, நெலுவ

களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட

கண்டி மாவட்டம்: உடபலாத்த, கங்க இஹள கோரளை

கேகாலை மாவட்டம்: தெரணியகல, யட்டியாந்தோட்டை, மாவத்தலை, தெஹியோவிட்ட, அரநாயக்க

நுவரெலியா மாவட்டம்: தலவாக்கலை

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி

 

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும்

 

 

கொழும்பு மாவட்டம்: சீதாவக்க

காலி மாவட்டம்: நியாகம, பலபிட்டிய / பத்தேகம

கேகாலை மாவட்டம்: வரகாபொல, கேகாலை, கலிகமுவ, புளத்கோஹுபிட்டிய, ருவன்வெல்ல

கம்பஹா மாவட்டம்: மீரிகம, அத்தனகல்ல

கண்டி மாவட்டம்: பாததும்பர, யடிநுவர, தொளுவ, உடுநுவர

குருணாகல் மாவட்டம்: அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல, மல்லவபிட்டிய

மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ, அதுரலிய, பிட்டபெத்தர

இரத்தினபுரி மாவட்டம்: களவானை, எலபாத, அயகம, பெல்மடுல்ல, நிவித்திகலை, குருவிட்ட

களுத்துறை மாவட்டம்: அகலவத்தை, பாலின்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்...