2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சட்டமூலத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்த நிலையில், அது நேற்று (21) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, 2027 ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட செலவினம் ரூ. 4,992,773,388,000 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு அடுத்த மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது


