Date:

எதிர்க்கட்சியில் அமரப்போகும் டலஸ் மற்றும் பீரிஸ்?

தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் அமரப்போவதாக முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினர்.

இதன்போது அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த அண்மைய சில தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

30க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய அவசரக்கால சட்ட வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை என அழகப்பெரும தெரிவித்தார்.

நேற்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஆதரவு தனது குழுவிற்கு இருப்பதாக அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், தாம் பதவியில் இருந்து விலகவில்லை என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆசிரியர், அதிபர் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

கஷ்டப் பிரதேச சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில் அதிகரிப்பு கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்...

இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரி நீக்கம்

இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்கி பெறுமதி சேர்...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை...