நாவலப்பிட்டியில் பல வீடுகள் நீரில் மூழ்கின

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகப் பதிவாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மேன்முறையீடு செய்தது ஏன்? …அனோஜனை காக்க உடனடி சட்ட, இராஜதந்திர நடவடிக்கை...

  ( ஐ. ஏ. காதிர் கான் ) "சவூதி அரேபியாவில் தண்டனையை எதிர்நோக்கியுள்ள நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற,...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு கல்குடா மண்ணிலிருந்து சட்டத்தரணி ஹபீப் றிபான் பெயரிடப்பட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ். வாசித்...