மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.

 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள், அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக, ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடு தொடர்பான விசாரணையில் சந்தேக நபராக...

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள...