நாட்டில் இன்றும் 100 மி.மீ மழை

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

 

அதேநேரம் ஏனைய பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் .

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

எயார்பஸ் விசாரணையில் நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணச்சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.   இந்த ராஜினாமா...