தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.


