96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை

2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.

 

இன்று காலை நிலவரப்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.19% உயர்ந்து, பெரல் ஒன்றுக்கு $ 96.13 டொலரை எட்டியுள்ளது.

 

இது முந்தைய விலை விட 1.96% அதிகமாகும்.

 

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் குறைதல் ஆகியவற்றின் காரணமாக, நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பெரல் ஒன்றுக்கு 120 டொலரைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதேவேளை, உக்ரைன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் நிலவும் மோதல்கள், உலகளாவிய பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் சந்தையில் பேரழிவு அபாயத்தை அதிகரித்து வருவதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்த ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக...

நடனக் கலைஞர் சன்ன விஜேவர்தன Diabetasol வர்த்தக நாமத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்

பிரபல நடனக் கலைஞரும் நாடக நடிகருமான இவர், Diabetasol வர்த்தக நாமத்துடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்துள்ளார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சமநிலை, ஒழுக்கம் மற்றும்...