பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்.

தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி அளுத்கம, லெவந்துவ பகுதியில் பிறந்த நந்தா மாலினி, சிறுவயதிலிருந்தே தனது பாடும் திறமையை வெளிப்படுத்தினார்.

தனது வளரிளம் பருவத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதிக்கு வருகை தந்த அவர், ஸ்ரீ குணானந்த வித்தியாலயத்தில் இணைந்தார். அங்கு அவரது பாடும் திறமையைக் கண்டறிந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் அவருக்கு இசைத் துறையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.

கவிதைப் போட்டியொன்றில் அவரது திறமையைக் கண்டறிந்த ஆசிரியை ஒருவர், கருணாரத்ன அபேசேகரவால் நடத்தப்பட்ட அன்றைய புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியான “லமா மண்டபய”விற்கு நந்தா மாலினியை அறிமுகப்படுத்தினார்.

அங்கு அவர் பாடிய “புது சாது” என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அவரது இசைப் பயணத்தில் ஒரு புதிய பாதை திறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

வவுனியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்

வவுனியா புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். புரவசம்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல்...

கடும் வறட்சி – குடிநீரை விநியோகிக்க புதிய சுற்றறிக்கை

எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக...