மாமாவின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான சம்பவம் கம்பளை – அட்டபாகை தோட்டத்தில் நேற்றிரவு (ஒக்.18) சுமார் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை – அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன் (வயது – 76) என்பவர் இயற்கை மரணம் எய்திய நிலையில் அவருக்கான இறுதிக்கிரியைகள் இன்று (ஒக்.19) இடம்பெறவிருந்தன.
இந்த நிலையிலேயே மரண வீட்டு வளாகத்தில் இருந்த மரம் மருமகன் மீது முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.