வவுனியா – நெடுங்கேணி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்றைய தினம் (ஒக்.18) மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனிப்பட்ட பிரச்சினையே இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தியே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தின் பிரமிளா என்ற 21 வயதான யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.