கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னதாக ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் இன்று அதிகாலை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், களனி, எம்பிலிப்பிட்டிய, ஜா – எல, இரத்தினபுரி, செவனக்கலை, வெல்லம்பிட்டிய, பிடிகல, வாத்துவ, நுகேகொடை ஆகிய பகுதிகளை சேர்ந்த 26 முதல் 58 வயதுக்கிடைப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் விசேட ஆய்வுகள் மற்றும் கைவிரல் அடையான இரசாயண பகுப்பாய்வு பிரிவிகள் என்பன கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு மத்திய சிரேஸ்ட்ட பொலிஸ் அதிகாரியின் தலைமையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.