Date:

உக்ரைனில் ஒரே நேரத்தில் பல பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீய்வின் பல மாவட்டங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி ரஷ்யா அதிரவைத்துள்ளது.

குறைந்தது 11 பேர்கள் காயங்களுடன் தப்பிய இந்த தொடர் தாக்குதலை அடுத்து அவசர சேவைக் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

கர்ப்பிணிப் பெண் உட்பட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைன் தலைநகர் மீதான தாக்குதல் தொடர்வதாகவும், மறு அறிவிப்பு வரும் வரையில் பொதுமக்கள் பாதுகாப்பு அறைகளில் இருந்து வெளியே வரவேண்டாம் எனவும் கோரியுள்ளனர்.

அத்துடன், மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் முடங்கலாம் என நகர நிர்வாகம் எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில், தலைநகரின் பல பகுதிகள் பற்றியெரிகிறது.

இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளியே இடிபாடுகள் நிறைந்த தெருக்களில் மக்கள் திரண்டுள்ளனர்.

ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த கீய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர், தலைநகரின் வெப்பப்படுத்தும் அமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல்...

தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

நெய்னா தம்பி மரிக்கார் மொஹம்மட் தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில்...