Date:

பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் சுற்றறிக்கை இரத்து

இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்கல் தொடர்பில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வகுப்பறையொன்றிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்டுள்ள எல்லைக்குள் மாத்திரம் பேண வேண்டியது அவசியமாகும்.

அதனால்,நாட்டிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தி, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக சரியான முறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, இடைநிலைத் தரங்களில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தற்போது கல்வி கற்கும் பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு உள்வாங்குவதற்கு உண்மையானக் தேவையாகவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் பாடசாலைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, புதிய சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனை செயற்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள உபசெயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளையும் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்புடைய வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, அதற்குப் பதிலாக புதிய ஆலோசனைச் சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கிழக்கு மாகாண வைத்தியர்கள் அதிரடி வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள...

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது பதவி காலத்தை நிறைவு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று...

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி...