Date:

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட அவர், தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார்.

பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தாம் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமிருந்தும் உயர் செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும், புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும், அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, பொலிஸ்மா அதிபராக நியமித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இதன்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொலைபேசி அழைப்பு மற்றும் இணைய வரி

கைப்பேசி பயனர்கள் இணையச் சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு...

350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி...

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக...