Date:

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இரு நாடுகளின் பிரதமர்களையும் அழைத்து, மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக தனது ட்ரூத் சமூக தள பதிவில் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பினரும் உடனடி போர் நிறுத்தத்தையும் அமைதியையும் நாடுவதாகவும், அவர்கள் உடனடியாக போர் நிறுத்தத்தில் ஈடுபடாவிட்டால் அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடப் போவதில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கம்போடியா பிரதமர் மற்றும் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமருடனான தனது கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கான தீர்வுகளைத் தேடுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தும் கம்போடியாவும் நீண்ட வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட இரண்டு நாடுகள் என்றும், எனவே அவர்கள் பல ஆண்டுகளுக்கு ஒத்துழைப்புடன் செயற்பாடுவார்கள் என்றும் நம்புவதாக டொனால்ட் டிரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...