கொழும்பில் பாரிய தீ விபத்து

கொழும்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.