Date:

மறைக்க ஒன்றுமில்லை – அமைச்சர் பந்துல பகிரங்கமாக தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி வசதி தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (21)   கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நிதி மீதான முழு அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என மேலும் தெரிவித்தார்.

மேலும், இந்த வேலைத்திட்டத்தின் விசேட அம்சம் என்னவெனில் 48 மாதங்களில் இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் அவர்களின் அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் உடன்பட்ட வேலைத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லையெனில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தமிதா மற்றும் கணவருக்கு பிணை

பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன...

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் திறந்துவைப்பு

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi)...

வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக வீரசேன கமகே அவர்கள் இன்று (24) சபாநாயகர்...

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்

உமாஓயா பல்நோக்குத்  திட்டத்தைத்  திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி...