Date:

மீண்டும் பிரதமராகும் மஹிந்த! பதவியில் இருந்து விலக தீர்மானம்

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.

நாட்டில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் காரணமாக தனது பதவியில் இருந்து ராஜபக்ஸ குடும்பம் சற்று தள்ளியிருந்தது.

இருப்பினும், தற்போது மீண்டும் தனது அரசியல் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பித்துள்ளதா என்ற கேள்வி எழும்புகின்றது.

அதற்கமைய, பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், அவர் ஏற்கனவே பிரதமர் பதவிக்கான சிறப்புரிமைகளை மிகவும் குறைவாகவே அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உடன்படவில்லை என்பதே அதற்குக் காரணமாகும்.

இன்னொரு தரப்பினர், மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என்று கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸை வாங்க 6 முதலீட்டாளர்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள்...

ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக...

பாடசாலை போஷாக்கு திட்டத்திற்காக பகிர்ந்தளிக்கப்பட்ட அரிசி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

மனிதப் பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்கு...

ஈரான் ஜனாதிபதி நாளை நாட்டுக்கு

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களுக்கு கையளிக்க ஈரான் ஜனாதிபதி...