Date:

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டுக்கான ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் முதலான நாடுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல், நவம்பர் மாதம் 14 ஆம் திகதிவரை இந்தத் தொடர் இடம்பெறவுள்ளது.

இறுதிப் போட்டி துபாயில் இடம்பெறவுள்ளது.

முதலாம் சுற்றிலுள்ள இலங்கை அணி, நமீபியா அணியுடன், ஒக்டோபர் 18 ஆம் திகதி தமது முதல் போட்டியில் மோதவுள்ளது.

முதலாம் சுற்று ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்த சுற்றிலுள்ள இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், 12 அணிகளின் சுற்றுக்கு தகுதிபெறும்.

இரு குழுக்கள் உள்ள 12 அணிகளின் சுற்று, ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல், நவம்பர் 8 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, நவம்பர் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெற்று, 14 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல்...

தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

நெய்னா தம்பி மரிக்கார் மொஹம்மட் தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில்...